Friday, March 12, 2021

வளர்முகநாடுகளில் சனத்தொகை அதிகரிப்பினால் ஏற்படும் விளைவுகள்

 மக்களிற்கான வதிவிட பற்றாக்குறை- வளர்முக நாடுளில் சனத்தொகை அதிகரிப்பினால் அவர்களிற்கான இருப்பிடங்கள் குறைவாகவும், மக்கள் ஒரு பிரதேசத்தில் நெருக்கடியாக வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக ஒரு கிலோமீட்டர் பரப்பில் 146 பேரும், பாகிஸ்தானில் 232 பேரும், பங்களாதேஷில் 1139 பேரும், இலங்கையில் 320 பேரும் வாழ்கின்றனர். இதனால் எதிர்காலங்களிலும் சரி இன்றும் சரி மக்களிற்கான வதிவிட பற்றாக்குறை ஏற்றப்படுகின்றது.

காடழிப்பு ஏற்படுகின்றது- அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப குடியிருப்புக்களினை அமைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் அதிகளவிலான காடுகளினை அழிக்கின்றனர். இக்காடுகள் அழிப்பினால் சூழல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதோடு புவி வெப்பமடைதல் பிரச்னையும் உருவாகின்றது. குறிப்பாக இந்தியாவில் 1900- 2000 ஆண்டுவரை 677701000 ஹெக்டேயர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் வருடாந்தம் 361500 ஹெக்டேயர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது. இதுதவிர கொங்கோவில் வருடாந்தம் 500 சதுரகிலோமீட்டர் பரப்பு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது.

சனத்தொகை

வேலையில்லா பிரச்சனை- அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப ஒரு நாட்டில் அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கமுடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் அதிகளவிலான கல்வி கற்ற மக்களும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் 2017ம் ஆண்டு 18.3 மில்லியன் மக்களும், 2018ம் ஆண்டு 18.6 மில்லியன் மக்களும், 2019ம் ஆண்டு 18.69 மில்லியன் மக்களும் வேலையில்லா பிரச்சனை காரணமாக அவதிப்படுகின்றனர். 

வறுமை நிலை உண்டாகும்- அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப மக்களிற்கு போதுமான வேலைவாய்ப்பு இல்லாமல்  போகின்றது. அத்துடன் மக்கள் தமது தேவைகளையும், சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகின்றது. இதனால் வறுமைநிலை ஏற்படுகின்றது. குறிப்பாக ஆசியாவில் 135.8 மில்லியன் மக்களும், ஆபிரிக்காவில் 422.2 மில்லியன் மக்களும், தென் அமெரிக்காவில் 17 மில்லியன் மக்களும் வறுமையினால் பாதிக்கப்படுகின்றனர். உலகளாவிய ரீதியில் 88 நாடுகள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மாத்திரம் 640 மாவட்டங்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சனத்தொகை

உணவு நெருக்கடி ஏற்படுகின்றது- வளர்முக நாடுகளினை பொறுத்தவரை சனத்தொகை அதிகரிப்பினால் மக்களிற்கு போதுமான அளவு உணவு கிடைக்க பெறாத நிலை ஏற்படுகின்றது. அத்துடன் விவசாய நிலங்களும் துண்டாடப்படுகின்றது. இதனால்  பஞ்சம், பசி, பட்டினி போன்றன ஏற்படுகின்றன. குறிப்பாக எதியோப்பியாவில் 8 மில்லியன் மக்களும், எதித்ரியாவில் 1.3 மில்லியன் மக்களும், ஆப்கானிஸ்தானில் 2.5 மில்லியன் மக்களும், இந்தியாவில் 130 மில்லியன் மக்களும் உணவு பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...